Vaanile Endha Naalum
Anu
Hero Raja
Music Director M.S.Viswanathan
Lyricist Kannadasan
Singers Vani Jayaram
Year 1982
Song Lyrics

வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம்
தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம்
நாளெல்லாம் மணவிழா வாழ்வெல்லாம் திருவிழா
வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம்....

சிரிக்கும் வாழைத் தோட்டங்களில்
பறக்கும் கிள்ளை கூட்டங்களே
துடிக்கும் தோகை ஆட்டங்களில்
எனக்கும் பேசிக் காட்டுங்களே

அரசன் போன்ற என் நாயகன்
அதிக காலம் வாழ்வான் என்று
இறைவன் அருளை சொல்லுங்களேன்
வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம்...

சிவந்த கன்னம் பாலூறவும்
கனிந்த வாயில் தேனூறவும்
விருந்து உண்ணும் பெண்ணாகவே
மயங்கி உண்ணும் நாள் வந்தது

விடியும் நேரம் பாராமலே
முடிவில்லாமல் நான் பேசுவேன்
இரவு முழுதும் சொர்க்கங்களே
வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம்...

ஒளியின் மேன்மை தீபத்திலே
தீப மேன்மை தெய்வத்திலே
தெய்வ மேன்மை கோயிலிலே
கோயில் மேன்மை குடும்பத்திலே
புதிய சீதை நானாகவும் இதய ராமன் அவராகவும்
இருவர் வாழ்வும் அமையட்டுமே.. ( வானிலே )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY