Santhana Kattinil Malligai
Anu
Hero Raja
Music Director M.S.Viswanathan
Lyricist Kannadasan
Singers SP. Balasubramaniam,Vani Jayaram
Year 1982
Song Lyrics

சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது
மங்கல வாசங்கள்
சாயங்காலம் பௌர்ணமி நிலவில்
சங்கதி பேசுங்கள்...ஆஆ சங்கதி பேசுங்கள் ( சந்தன )

மயக்கும் கண்கள் நாலும் சேர்ந்து
கவிதை எழுதுங்கள்
மாரிக் கால மேகந்தன்னில்
ஊர்வலம் செல்லுங்கள்
வானம்பாடி ஞானம் கொண்டு கானம் பாடுங்கள் ( சந்தனக் )

ஆலிலை மீது கோயிலைக் கண்டு
ஆடிக் கூடுங்கள்...
ஆசையென்னும் நீலக் கடலின்
ஆழம் பாருங்கள்

பாலில் ஊறும் கனியைப் போலே
அன்பினில் ஊறுங்கள்
பாதி கண்ணில் பார்த்துக் கொண்டே
வேதம் படியுங்கள்... ( சந்தனக் )

ஓரடி முன்னும் ஓரடி பின்னும்
காலடி போடுங்கள்......
ஊஞ்சல் போலே ஒருவர் தோளில்
ஒருவர் ஆடுங்கள்

ஆறடி கூந்தலை பஞ்சணையாக்கி
ஆனந்தம் கொள்ளுங்கள்
ஆதிக்கால மனிதரைப் போலே
பாஷை பேசுங்கள்.. ( சந்தனக் )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY