Kudikkathe Thambi Kudikkathe
Naan Kudithukonde Iruppen
Hero Vijayakumar & Thengai Srinivasan
Music Director M.S.Viswanathan
Lyricist Vali
Singers T.M.Soundarajan
Year 1982
Song Lyrics

குடிக்காதே தம்பி குடிக்காதே நீ
குடிச்சுப்புட்டு கொடலு கெட்டு துடிக்காதே நீ
குடிச்சிருந்தா ஊருலகம் மதிக்காதே உன்
வீட்ட கழுத கூட மிதிக்காதே....( குடிக்காதே )

நல்ல மனுஷன் சாராயத்த தொட்டதுமில்ல
அது தொட்டவன லேசுலதான் விட்டதுமில்ல
மனுஷனோட ரத்தத்ததான் அட்ட குடிக்கும் ஆனா
மனைவி மக்கள் குடும்பத்தையே பட்டை குடிக்கும் ( குடிக்காதே )

பாடுபட்டு பணத்த சேர்த்து குடியில் விடாதே உன்
புள்ளக்குட்டி எல்லாரையும் தெருவில் விடாதே
பைய பைய கரைஞ்சி போகும் சில்லறதாம்பா உன்
பரம்பரைக்கு மிஞ்சுறது கல்லறைதாம்பா... ( குடிக்காதே )

வெளக்கு வச்சா ஆணும் பெண்ணும் சேர்ந்து குடிக்குது
இது வசதியுள்ள பெரிய இடத்தில் நாளும் நடக்குது
பால் குடிக்க தான் கொடுக்கும் தாய்மையின் ஜாதி அது
தான் குடிச்சா என்ன ஆகும் இயற்கையின் நீதி ( குடிக்காதே )

வார்னீஷ குடிச்சவங்க கண்ணு போச்சுங்க சிலர்
வாங்கிவிட்ட மூச்சு கூட நின்னு போச்சுங்க
விடியறப்போ விடியட்டும் நான் சங்கு ஊதுறேன்
அந்த காந்தி அண்ணா சொன்னததான் காதில் ஒதுறேன் ( குடிக்காதே )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY