Abiramavalliyin Thiruvarule
Om Sakthi
Hero Vijayakanth
Music Director Sankar Ganesh
Lyricist Abirami Patter
Singers Vani Jayaram,Deepan Chakravarthi
Year 1982
Song Lyrics

பூத்தவளே புவனம் பதினான்கையும்
பூத்த வண்ணம் காத்தவளே பின் கரந்தவளே
கறைகண்டனுக்கு மூத்தவளே
என்றும் மூவா முகுந்தற்க்கு இளையவளே
மாத்தவளே உன்னையின்றி
மற்றோர் தெய்வம் வந்திப்பதே.....

அபிராமவல்லியின் திருவருளே நம்மை
அனுதினம் காத்திடும் பொன்மலரே
புவியோரின் குறைத்தீர்க்க வந்தவளே இன்று
பூவாகி காயாகி கனிந்தவளே... ( அபிராமவல்லி)

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும்
தளர்வறியா மனம் தரும்
தெய்வ வடிவும் தரும் நெஞ்சில்
வஞ்சமில்லா இனம் தரும்
நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே...

சன்னதி தேடி வந்தவர்க்கு
சகல நலனும் தந்தாளே
அன்னையின் கண்கள் கனிவுடனே
அபயம் தரும் இந்நாளே
சந்தனத்தில் நின்றாளே சாம்பலிலும் பூத்தாளே
குங்குமத்தில் சிரித்தாளே
குழந்தை என்னை அணைத்தாளே.. (அபிராமவல்லி)

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை
அண்டம் எல்லாம் பூத்தாளை
மாதுளம் பூ நிறத்தாளை
புவியடங்கக் காத்தாளை
ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும்
அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத்
தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே

சமயபுரத்தில் கோயில் கொண்ட சங்கரி
சூலி நீலி பத்ரகாளி சாம்பவி
பெரியபாளையம் ஜோதி தவழும் ஆலயம்
அருள்வடிவாய் மாங்காட்டில் அமர்ந்திருப்பாளே
அனலாய் நிறைந்திருப்பாளே.. ( அபிராமவல்லி )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY