Thanthaikku Oru Piravi
Samarpanam
Hero Vijayakumar
Music Director N.S.Thiyagarajan
Lyricist Senthurai Marudha Muthu
Singers Dhanasekar,Mallika
Year 1974
Song Lyrics

தந்தைக்கு ஒரு பிறவி
தாயாருக்கோ இரு பிறவி
பிறந்தேன் முதல் பிறவி கண்ணா....
உன்னை பெற்றெடுத்தேன் மறுபிறவி

பெற்றெடுத்தல் அன்னை கடன்
மற்றதெல்லாம் தந்தை கடன்
கற்றறிந்த அறிஞர் என்று கண்ணா....
நல்ல பேரெடுத்தல் பிள்ளைக் கடன்....

காவியங்கள் தீட்டுவதில்
கவிஞர்கள் தலைவன்
காந்தி கண்ட ராஜ்ஜியத்தில்
காலமெல்லாம் தொண்டன்

வானத்தில் பறந்து சென்று
வல்லரசு நாடு கண்டு
வருவான் நியூட்டனை போல் என்றும்
வாழ்வினில் நீ உயர்ந்து.....( பெற்றெடுத்தல்)

பாரதம் உன் தாய் நாடு
பண்பு கொண்ட நல் வீடு
பகைவர்கள் இடறி விட்டால்
புலி போல போராடு

தந்தை வழி நடப்பாய்
தாய் சொல்லைக் கேட்பாய்
தாய் தந்தை தவறு செய்தால் அதை நீ
தங்கமே மாற்றி விடு.....(தந்தை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY