Rajagopala Ongamma Dosa
Sparisam
Hero S.V.Sekar
Music Director Ravi
Lyricist V.V.Subramaniyan
Singers B.Sasirekha,T.K.Kala,Murali
Year 1982
Song Lyrics

ராஜகோபாலா ஒங்கம்மா தோசை வாத்தாளா
வேணுகோபாலா ஒங்கம்மா வெண்ண தந்தாளா
போதை ஏறுதா இது போதவில்லையா
அட குண்டு சாரதா கொஞ்சம் மொண்டு தாரியா (ராஜகோபாலா)

ராக்கோடி வச்சிக்கிட்டு ராதா நடப்பா
ராத்திரி என் கனவுலதான் வந்து சிரிப்பா
ஊர்வசியும் உர்ர்ன்னு தான் ஒக்காந்து இருப்பா
கொஞ்சம் ஊத்திக் கொடுத்தா ஊர்க்குருவி போல பறப்பா

ஊத்தி ஊத்தி மாளல இவன் தாகம் தீரல
உருப்படியா சங்கதி ரெண்டு போட தெரியல
ஊத்தி ஊத்தி மாளல என் தாகம் தீரல
இந்த ஒடம்பு வெறும் காத்தாக மாறி போகல

ராஜா வந்தாச்சு மந்திரி என்னாச்சு
கூஜா தண்ணியில குளிச்சு குளிரெடுத்தாச்சு
ஸ்ரீனிவாசண்ணா கொஞ்சம் சிரிச்சு பேசண்ணா
முத்துக்கருப்பண்ணா கொஞ்சம் மொகத்த திருப்பண்ணா..

ஜாடிக்குள்ளே இருக்குதடி நல்ல சரக்கு
ஜாடையாக சொன்னாலும் புரியும் உனக்கு
தாடி மீச மொளைக்காத அம்பி பயலுக்கு
இப்ப தலக் கிறுக்கு வந்திருக்கு திருஷ்டி சொடுக்கு

தட்டாமாலை சுத்துதடி தானா இந்த பூமி
தாளம் போட வாடி சிலுக்கு தாவணி கட்டிய மாமி
கொட்டாவிக்கு ஸ்ருதி சேர்த்து குடிச்சு பாக்குறான்
அட முட்டாப் பையன் வானத்துல பள்ளம் தோண்டுறான்

தாவி தாவி குதிச்சாலும் தரைய காணோன்டி
தலைக்கு மேலே வானம் வந்து தடுக்கல போடி
ஆவிக்குள்ளே மகுடி சத்தம் அஞ்சு தல பாம்பு
ஆடிகிட்டே நெளியுதடி அனலடிக்குது மூச்சு ( ராஜாகோபாலா)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY