Bayilaa Padungada
Sparisam
Hero S.V.Sekar
Music Director Ravi
Lyricist A.Ramanan
Singers Sundaresan,Harish,Muthu Raja,Raja Ravivarma,Murali
Year 1982
Song Lyrics

ஊதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஓசியிலே தம் அடிக்க அலைய வேண்டாம்
மாதாவை பணம் கேட்டு கெஞ்ச வேண்டாம்
மங்காத்தா துணையிருக்கும் அஞ்ச வேண்டாம்

பாயிலா பாடுங்கடா பண்டார சாமிகளா
பாவப்பட்ட ஜென்மங்களா படிக்க வந்தீங்களா
பாயிலா பாடுங்கடா பண்டார சாமிகளா
பாவப்பட்ட ஜென்மங்களா படிக்க வந்தீங்களா

நாமெல்லாம் ஒரு குடும்பம் நாலு பேரு மெச்சிக்கணும்
மாப்பிள்ள மச்சிங்கன்னு உறவு முறை வச்சிக்கணும்
டாவடிக்க தெரிஞ்சுக்கணும் டான்ஸ் கொஞ்சம் பழகிக்கணும்
சொவத்து மேலே ஏற கத்துக்கணும் உன்ன
தலைவர்ன்னு சொல்லிபுட்டா ஒத்துக்கணும்

பிரின்ஸ்பால் ரூமுக்குள்ளே பெருச்சாளி இருக்குது
கெமிஸ்ட்ரி லாபுக்குள்ளே பெருங்காயம் மணக்குது
புரொபசர் சிங்காரம் தொறந்தா புகை வருது
வழிவிட்டு நகருங்கடா அம்மன் கோயில் தேரு வருது (பாயிலா)

ஓம் கணபதி ஓம் கணபதி ஹாஸ்டல் போயாணும்
இப்போ பாடி முடிக்கணும் உனக்கு கோடி நமஸ்காரம்
ஷண்முக பொடி மட்ட தூளு ஹாஸ்டல்
சமையல் ரூமுக்குள்ளே எத்தனை வவ்வாலு

அந்த மரத்துக்கும் இந்த மரத்துக்கும் அடிச்சது காத்து
நம்ம கூரையப் பேத்து தூக்கி கிட்டு போனது நேத்து
மழை பேஞ்சு உடம்பெல்லாம் தண்ணி
மாமன் மகள் காவேரிய மனசுக்குள்ளே எண்ணி
மலைச்சு போயி நின்னுப்புட்டேன் கையும் காலும் பின்னி
அட மக்கா நாளு புடிச்சிகிச்சு மலேரியா ஜன்னி...
மழை பேஞ்சு.....அய்யோ மழை பேஞ்சு...

ஹாஸ்டல் ரூமுக்குள்ளே ஆலோலம் பாடுங்கடா
காக்கா குருவி எல்லாம் கூடு கட்டி வாழுதடா
தி.க. தி.மு.க. அ.தி.மு.க. இ.க. ஜனகா...க.கா.தே.கா.
எந்த கட்சி வந்தாலும் எங்களுக்கு கவலையில்ல
எங்களுக்கு வெந்நீர் வைக்க ஏத்த ஒரு தவலையில்ல ( பாயிலா)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY