Kalaimagale Unnai Azhakindren
Vadivangal
Hero Ramji
Music Director Chandrabose
Lyricist Vali
Singers Vani Jayaram
Year 1982
Song Lyrics

கலைமகளே உன்னை அழைக்கின்றேன்
காவிய சுவையினை அறிகின்றேன்
நிலையாய் இசையுடன் இணைந்தவளை
நான் பாடுகின்றேன்...... ( கலைமகளே )

நாட்டிய கலையே அபிநயமாகும்
நங்கையின் மொழியே கவி நயமாகும்
முகிலாட துகிலாட புது கோலங்கள்
விழியாட மொழி பாட தேன் ராகங்கள் (கலைமகளே )

தாமரை மலரில் வண்டுகள் ஆடும்
தை தை என்றே ஜதி ஸ்வரம் பாடும்
மலை மீது தவழ்ந்தாடும் வெண் மேகங்கள்
மயிலாட நின்றாடும் பூஞ்சோலைகள் ( கலைமகளே )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY