Idhaya Vaanil Ulavukindra
Vadivangal
Hero Ramji
Music Director Chandrabose
Lyricist Vali
Singers SP. Balasubramaniam,Vani Jayaram
Year 1982
Song Lyrics

இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே
இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே
வசந்தங்கள் அழைக்கின்றதே
வரவேற்பு தருகின்றதே.... ( இதய வானில் )

கரையோரம் அலைகளே விளையாடும் பொழுதிலே
ஆசைக்கு முடி சூட்டவா
இமையோரம் விழிகளே கதை பேசும் நிலையிலே
இன்பங்கள் நெஞ்சோடு உறவாடுமே

இது என்ன கூந்தலா மலராடும் ஊஞ்சலா
இதழென்ன தேனடைதானோ
நீயே என் கண்மணி சுவையூறும் மாங்கனி
சிந்தாமல் சிரிக்கின்ற சிந்தாமணி...... (இதய வானில்)

செதுக்காத சிற்பமோ படிக்காத நாவலோ
சிங்கார கலைக் கூடமோ
கவி பாடும் வேளையில் ரவிவர்மன் ஓவியம்
கண்ணான கண்ணே உன் உருவானதோ

ஒரு கோடி ஆசைகள் உள்ளத்தின் ஓசைகள்
உருவாகும் சங்கீதமே
உன் பார்வை மோகனம் நானே உன் சீதனம்
உனக்காக என்றென்றும் நான் சொந்தமே... ( இதய வானில் )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY