Naan Aathu Pakkam
Paritchaikku Neramachu
Hero Sivaji Ganesan & Y.G.Mahendran
Music Director M.S.Viswanathan
Lyricist Vali
Singers L.R.Eswari
Year 1982
Song Lyrics

நான் ஆத்துப் பக்கம் குளிக்க போனா
அம்பி பைய என்னை பாக்கிறான்
நான் அரிசி வாங்க கடைக்கு போனா
அட அல்வா பிச்சை என்ன பாக்கிறான்

நான் கோயிலுக்கு கும்பிட போனா
அந்த கோவிந்தன் குட்டி என்ன பாக்கிறான்
நான் சிம்லா ஸ்பெஷல் சினிமா போனா
விசிலடிக்கும் வில்லியம்ஸ் என்ன பாக்கிறான்
அவன் என்ன பாக்கிறான் என்ன பாக்கிறான்.....

வாசப் பக்கம் நின்னேனுங்க அங்கே
வயசுப் பசங்க வந்தானுங்க
வாரி முடிச்சி வச்சிக்க சொல்லி
வாசப் பூவ தந்தானுங்க

கண்ணால் ஜாடை பண்ணானுங்க
காதலிக்க சொன்னானுங்க
எனக்கு ஒண்ணும் புரியவில்ல
காதல் என்றால் என்னாங்க
அது என்னாங்க.......என்னாங்க..... ( நான் )

மூணு மாசம் முன்னாடிதான் நான்
மூணு ரவிக்கை தச்சேனுங்க
தச்சிக் கொடுத்த தையக்காரன்
கூலி வாங்க வந்தானுங்க

மொத்த கணக்க போட்டானுங்க
முத்தம் ஒண்ணு கேட்டானுங்க
எனக்கு ஒண்ணும் புரியவில்லை
முத்தமுன்னா என்னாங்க
அது என்னாங்க.......என்னாங்க..... ( நான் )

கன்னிப் பொண்ணு நான்தானுங்க யாரும்
கட்டிக்காத மான் தானுங்க
பொருத்தமான புருஷன தேடி
பூத்துப் போச்சு கண்தானுங்க

பத்து பேரு வந்தானுங்க
பாத்து பாத்து போனானுங்க
இரண்டு குழந்தை இருக்கையிலே
ஏத்துக்கிட்டா என்னாங்க
என்னாங்க.......என்னாங்க.......( நான் )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY