Romba Naalaga Aasa Nee
Ragam Thedum Pallavi
Hero Sankar & Rajeev
Music Director T.Rajendar
Lyricist T.Rajendar
Singers SP. Balasubramaniam
Year 1982
Song Lyrics

ரொம்ப நாளாக ஆச நீ பக்கம் வாராயோ பேச
வெக்கம் ஏனம்மா சொல்லு என்
சொர்க்கம் நீதானே நில்லு
பட்டு ரோசாப்பூ உனைப் பாக்கவே
பாழும் உடம்புதான் நெருப்பானதே.. ( ரொம்ப )

பாரி தேருக்கு முல்லைக் கொடி
வாரி அணைக்கத்தான் வந்தேனடி
வாடி இளைச்சுத்தான் போனேனடி
வாடை காத்துக்கு தங்கச்சி நீ

சாமத்திலே கனவு ஹ ஹ ஹ
ஜாடையிலே நிலவு ஹோ ஹோ ஹோ
சாமத்திலே கனவு ஜாடையிலே நிலவு
தூக்கம்தான் கலைந்ததடி ஏக்கம்தான் விளைந்ததடி

இடை நூலு இளைப்பாரு
தண்டை காலு ஜதி சேரு
வாழை தண்டுக்கு பொன் பூசி கொண்டாடினாய்
வண்டு கண்ணுக்குள் அமுதத்தை ஏன் தூவினாய்.. ( ரொம்ப )

தார தப்பு மேளங் கொட்ட ஊர வச்சி தாளம் தட்ட
அம்மன் கோவில் தேராட்டமே
அசைஞ்சா நெஞ்சில் போராட்டமே
ஆள வதைக்கும் என் அன்னமே

குஞ்சத்தோடு சடையும் போட்டு
கூறை நாட்டு சேலை கட்டு
உடன் மஞ்சத்தில் கொஞ்சத்தான்
நெஞ்சத்தில் அலைபாயுது
மலர் கொத்துன்னை அள்ளத்தான்
நாளெல்லாம் மனம் வாடுது

தொட்டு குலுங்காத பூச்சரமே
தோகை மயிலுக்கு இலக்கணமே
கட்டுக்கடங்காத இளமனசு
கட்டு குழலோடு மல்லியப்பூ

வச்சாளே ராசாத்தி ஸ்....ஹ
விளக்கணைக்கும் பொழுதாச்சு ஓஹோ
வீட்டு கதவெல்லாம் கண் மூடுமோ
கண்ட கனவெல்லாம் நனவாகுமோ

இதழ் ஊற இருள் சூழ
நங்கை நாண நடை வாட
புது அச்சத்தை முகத்தோரம்
படிக்கத்தான் அச்சாக்கினால்
மது வெள்ளத்தில் மூழ்கத்தான்
மொத்தத்தில் ஆளாக்கினாள்........( ரொம்ப )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY