Moongilile Paattisaikkum
Ragam Thedum Pallavi
Hero Sankar & Rajeev
Music Director T.Rajendar
Lyricist T.Rajendar
Singers SP. Balasubramaniam
Year 1982
Song Lyrics

மூங்கிலிலே பாட்டிசைக்கும்
காற்றலையை தூதுவிட்டேன்
அவள் முகவடிவை மனம் பார்த்த பின்னே
அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை
அந்த பௌர்ணமியை இவன் ஹ்ஹ ரசிப்பதில்லை (மூங்கிலிலே)

இரு விழி கவிதை தினசரி படித்தேன்
பொருள் அதை அறிய வழி ஏதும் இல்லை
புதுப்புது வார்த்தை தினம் தினம் தேடி
பார்வையில் அமுதாய் அவள் வடிப்பாள் ஆஆஹாஆ

நீர் அலைப் போலவே நீலவிழிக் கோலங்கள்
நெஞ்சை நீராட்டவே நெருடி தாலாட்டவே
என் கற்பனைக்கு விதை தூவினாள் ஹோய் ஹோய்
என் கற்பனைக்கு விதை தூவினாள்

மூங்கிலிலே ஹ ஹ ஹ ஹ
பாட்டிசைக்கும் ஹோ ஹோ ஹோ ஹோ
காற்றலையை ஹே ஹே ஹே ஹே
தூதுவிட்டேன் தர தர தர தர

ஆடை ஒன்றை எடுத்து தென்றலுக்கு உடுத்த
மின்னலென நெளிந்த மேனகையோ
செங்கரும்புச் சாரும் செவ்விதழில் தானே
இனிப்பெனும் சுவையை கற்றுக் கொண்டது ஹாஆஆ

மாது இதழ் இடத்திலே மாதுளங்கனி
முத்தை சிவப்பாக்கவே மா தவம் செய்தது
அவள் வரம் தரவே செந்நிறமானது
ஹை ஹை ஹை ஹைய்ய்
அவள் வரம் தரவே செந்நிறமானது

மூங்கிலிலே ஏ ஏ ஏ ஏ பாட்டிசைக்கும் ம் ம்
காற்றலையை....தூதுவிட்டேன்
அவள் முகவடிவை மனம் பார்த்த பின்னே
அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை

லர ரா ரா ரா ரா ரா ரா ராஆ ஆ ஆ ஆ
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY