Naan Azhuthathum Illai
Ragam Thedum Pallavi
Hero Sankar & Rajeev
Music Director T.Rajendar
Lyricist T.Rajendar
Singers S.Janaki
Year 1982
Song Lyrics

நான் அழுததுமில்லை யாரும் பார்த்ததுமில்லை
இதழ் வாடிடும் முல்லை இதில் வாசனை இல்லை
தெய்வமே நீயும் யோசித்து பாரு
தென்றலே நீ என் வேதனை கேளு..... ( நான் )

கடந்த காலம் கசந்த காலம் ஆகிப் போனதே
என் ராகத்துக்கு பல்லவியோ மாறிப் போனதே
தொடர்கதையா துயர் நிறைந்தாள்
தணல் நடுவே பூ விழுந்தாள்

நான் தனி மரமா பூத்திருந்தேன்
பொறுக்கவில்லையே.....
நீ கடவுள் என்பாய் கல்லெறிந்தாய்
கருணை இல்லையே ஆ ஆ ஆ ஆ... ( நான் )

நானிருந்தேன் நாண் அறுந்த வீணையை போல
அதில் நாதம் மீட்ட கணவர் வந்தார் என் மனம் போற்ற
அவர் மெய் தழுவ நான் கானம் தந்தேன்
அதை நோய் தழுவ நான் சோகம் கொண்டேன்

நான் மஞ்சளுடன் குங்குமத்தை சேர்த்து சூடுவேன்
எமன் கண்களுக்கு நோய் விதிக்க
உன்னை வேண்டுவேன் ஆ ஆ ஆ ஆ...
நான் அழுததுமில்லை யாரும் பார்த்ததுமில்லை.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY