Aazh Kadalil Thaththalithu
Ragam Thedum Pallavi
Hero Sankar & Rajeev
Music Director T.Rajendar
Lyricist T.Rajendar
Singers SP. Balasubramaniam
Year 1982
Song Lyrics

ஆழ் கடலில் தத்தளித்து
நான் எடுத்த முத்து ஒன்றை
விதியவன் பறித்தது ஏன் ஏன்
உற்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது
பூஜையதும் கலைந்தது ஏன் ஏன்.... ( ஆழ்கடலில் )

காதல் மொழியை பொழிந்தவள்
கானல் நீராய் மறைந்தவள்
சாவு வந்திடினும் சேர்ந்து இறந்திடுவோம்
அன்று சொன்னவளை இன்று காணவில்லை அது ஏன்
அவள் வார்த்தை தொலைந்ததேன்
என் வாழ்க்கை குலைந்ததேன்.... ( ஆழ் கடலில் )

மார்கழி மாத கோலமிட்டாள்
தண்ணீர் குடம் தூக்கி வந்தாள்
கரை போல் காத்திருந்தேன்
நதியை எதிர்ப் பார்த்திருந்தேன்

கதை மாறிடவே கரை வேறு கண்டால்
கால அலைகளுடன் புது
நதியை கொண்டாள் அது ஏன்
என் மனதில் பாலைவனமானேன்
மணி விழியில் சோக கடலானேன்.. ( ஆழ் கடலில்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY