Kaattukkulle Kanni Ponnu
Vesham
Hero Arjun
Music Director Sankar Ganesh
Lyricist Pulamai Pithan
Singers Vani Jayaram
Year 1985
Song Lyrics

காட்டுக்குள்ளே கன்னிப் பொண்ணு
கைய வச்சான் பையன் ஒண்ணு
மாட்டிக்கிட்டான் இங்கே வந்து
மாமோய் மாமோய் கட்டிக்கணும் தாலி
இல்லாவிட்டால் காலி..... ( காட்டுக்குள்ளே)

கட்டிக்கிட்டா தேக்குமரக்
கட்டிலொன்னு செஞ்சி வைப்போம்
பொண்ண கட்டிக்கணும் சொன்னா ஒத்துக்கணும்
இல்லாவிட்டால் சொல்லிப்புட்டோம்

காலே இல்லா கட்டிலிலே கட்டி வைப்போம்
கட்டையிலே கொள்ளி வைப்போம்
கல்யாணம் தானா கச்சேரிதானா
சந்தோஷம் தானா பேசேன்டா.... ( காட்டுக்குள்ளே)

கட்டுப்பட்டா கட்டுப்படு
இல்லையின்னா வெட்டுப்படு
என்னா பண்ணிக்கிறே ஏது பண்ணிக்கிறே
கோபப்பட வைக்காதேடா நிக்காதேடா

மேளம் கொட்டு தாலிக் கட்டு
இல்லையின்னா வெட்டுப்படு
போகத்தான் போறே பொண்ணத்தான் பாரேன்
சொர்க்கத்தை இங்கே பாத்துக்கோயேன்.. ( காட்டுக்குள்ளே )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY