Kanne Balu Kanmani Balu
Vesham
Hero Arjun
Music Director Sankar Ganesh
Lyricist Pulamai Pithan
Singers Sundar Rajan,Vivek Sarathy,Sakthi Shanmugam
Year 1985
Song Lyrics

கண்ணே பாலு கண்மணி பாலு
சொன்னா சொன்னதக் கேளு அட
உன்னாலத்தானே நாடு முன்னேற வேண்டும்
நல் வாழ்த்துக்களை வழங்குகிறோம்
போக்கிரி ராஜா உனக்கு
ஹாப்பி பர்த் டே டு யூ ஹாப்பி பர்த் டே பாலு ( கண்ணே)

நாட்டை ஆண்டிட போகும்
நாளைய மந்திரி நீயோ
ஓட்டை போட்டதும் நீதான்
ஊரை மறந்திடுவாயோ

எல்லாரும் குடிச்சு கும்மாளம் அடிக்க
நல்லாட்சி நடத்திடுவாயோ
ஏராளமாக சாராயக் கடைய
எங்கேயும் திறந்திடுவாயோ
நல்லப் பிள்ளை போலேத்தான் நீயும் நடிப்பாயோ
உன்னை நம்பி தேசம்தான் உருவாகும் நேரம்தான் ( கண்ணே )

திருப்பூர் குமரனைப் போலே
கொடியை பிடிச்சிடுவாயோ
இல்லை மீனம்பாக்கத்தின் உள்ளே
வெடிய வெடிச்சிடுவாயோ

பேட்டைக்கு பேட்டை சோடாவ ஒடிச்சு
போராட்டம் நடத்திடுவாயோ
வேண்டாத பேர கூண்டுக்குள் நிறுத்தி
வீராப்பு பேசிடுவாயோ
இஷ்டம்போல நீயும்தான் அரசாள போறாயோ
என்ன உந்தன் எண்ணம்தான் எங்களிடம் கூறாயோ ( கண்ணே

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY