Navagraha Nayagiye Karumari
Navagraha Nayagi
Hero Vijayakanth Suresh Pandiyan
Music Director M.S.Viswanathan
Lyricist Pulamai Pithan
Singers Seerkazhi Govindarajan
Year 1985
Song Lyrics

நவக்கிரக நாயகியே கருமாரி
நலங்கள் யாவும் தருபவளே அருள்மாரி
மங்கள வடிவான சங்கரியே
மாலவன் சோதரியே வைஷ்ணவியே
திருமாலவன் சோதரியே வைஷ்ணவியே அம்மா (நவக்கிரக)

சிக்கலிலே வேல் கொடுத்த தாயே அன்று
சீர்காழியில் பால் கொடுத்ததும் நீயே தாயே
மக்கள் துயரைத் தாங்கும் தஞ்சை முத்துமாரி
மாங்கல்யம் காப்பாற்றும் மீனாட்சியே மதுரை மீனாட்சியே (நவக்கிரக)

நொய்யல் கரை வாழும் மாகாளியே
நோய்களெல்லாம் தீர்க்கும் உந்தன் அருளாசியே
உந்தன் அருளாசியே .அம்மா…..
நவக்கிரக நாயகியே கருமாரி
நலங்கள் யாவும் தருபவளே அருள்மாரி.......

குங்குமத்தில் சிரிக்கின்ற
கற்பகாம்பிகே மயிலை கற்பகாம்பிகே
குலமாதர் சௌபாக்ய காமாட்சியே காஞ்சி காமாட்சியே
கங்கை கரை அமர் விசாலாட்சியே காசி விசாலாட்சியே
கலைகளெல்லாம் தந்தருளும் மூகாம்பிகே
கொல்லூர் மூகாம்பிகே…......(நவக்கிரக)

ஞானமழை பொழியும் கலைமகள் நீயே
நல்லறச் செல்வம் தரும் அலைமகள் நீயே
வேதம் புகழ் பாடும் மலைமகள் நீயே
வெற்றி எல்லாம் தந்தருளும் வேலவன் தாயே அம்மா (நவக்கிரக)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY