Geethai Kuyil Paadum Kural
Navagraha Nayagi
Hero Vijayakanth Suresh Pandiyan
Music Director M.S.Viswanathan
Lyricist K.V.K. Shankar
Singers Vani Jayaram
Year 1985
Song Lyrics

கீதை குயில் பாடும் குரல் கேட்டது
காலம் ஒரு சோகக் கதையானது
இதுதானா உந்தன் ராஜாங்கம்
புது வேதம் சொல்லும் சாம்ராஜ்யம்... ( கீதை )

காற்றானாய் வண்ணப் பூவானாய்
கங்கை நீரானாய் நெஞ்சில் தீயானாய்
காற்றானாய் வண்ணப் பூவானாய்
கங்கை நீரானாய் நெஞ்சில் தீயானாய் ( கீதை )

திருக்கோவில் அலங்காரம் சங்கீத சிங்காரம்
திருநாளைத்தான் தேடுது
மலையொன்றை குடையாக்கி நதியோரம் குழலூதி
நடந்தாயே கோபாலனே.......

அருள் நெஞ்சோடு வந்தாலே உனை நீயும் தந்தாலே
என் பார்வை ஒளி வீசுமே
பாயும் நதி காயும் வரை மேகம்
கோடை மழை தூவும் நிலை மாறும் திருமாலே
உந்தன் விளையாட்டு முறைதானா குறை தீராயோ ( கீதை )

செந்தூர பொட்டோடு பட்டாடை கோலங்கள்
கண்டாலே கண் மூடுமா
கண்ணா உன் பூமேனி கண்டேனே நாள்தோறும்
கண் மூடி நான் வாடினேன்

இனி என் வாழ்வு துயர்தானா
சுகம் எந்தன் பகைதானா
என் கண்ணா நீ சொல்லுவாய்

ஆடும் இதில் போடும் திரை ஆயிரம்
வாடும் மனம் காணும் ஒரு நாடகம்
இறைவா நீ அங்கு வருவாயா
புது நீதி சொல்லித் தருவாயா.....( கீதை )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY