Udhyathil Oli Thandhu
Navagraha Nayagi
Hero Vijayakanth Suresh Pandiyan
Music Director M.S.Viswanathan
Lyricist K.R.Arivanantham
Singers T.M.Soundarajan,B.Sasireka,kovai Kamala,Sreepathi
Year 1985
Song Lyrics

உதயத்தில் ஒளி தந்து உலகத்தை வாழ்விக்கும்
ஒப்பற்ற செஞ்சுடரைப் போற்றுவோம்
சிவமாகி திருமாலின் வடிவான
நவக்கிரக தேவனை நாம் வாழ்த்துவோம்

ஆடுதுறை தனையின்று நாடுவோம்
அந்த சூரியனார் கோயிலிலே காணுவோம்
சந்ததமும் புகழ் தரும் வாழ்விலே
என்றும் செந்தாமரை மலர் கொண்டே வணங்குவோம்

சந்திர தேவனை சிந்தையில் நினைத்தால்
இந்த உலகினில் எந்தக் குறையுமில்லை
திருப்பதி மலை சென்று திருமாலின் பாதத்தில்
வெள்ளை மலர் தூவினால் துயரமில்லை
அதில் சந்திரனின் அருள் கிடைக்கும் ஐயமில்லை

ருத்ரமூர்த்தியின் வியர்வையில் வந்த
யுத்த பூமியின் தலைவனாம்
உக்ரமூர்த்தியாம் செவ்வாய் குகனுடன்
இருப்பான் பழனியில் திடம் தரவே
செண்பக மலரால் வணங்குவோம் அவனருள் பெறவே
செவ்வாய் தோஷம் நீங்கிடும் மங்கையர் நலம் பெறவே

ஆயகலைகள் யாவும் அருள்பவன் புதனன்றோ
அவனருள் பெற்றார்க்கு வித்தையில் குறைவுண்டோ
தூய சொக்கநாதருடன் மதுரையில் அமர்ந்திட்டான்
துலங்கும் வெண்காந்தள் மலர் தந்தால் அருள் புரிவான்

தேவரெல்லாம் துதிக்கும் பிரஹஸ்பதி
உன் திருவிழி பட்டாலே மாறும் தலைவிதி
ஸ்ருதியும் ஸ்ம்ருதியும் நீ தரும் வரமன்றோ
சொல்லிய ஞானமெல்லாம் குரு தரும் அருளன்றோ
திருச்செந்தூரில் உன்னை தரிசித்தாலே போதும்
முல்லை மலர் கொண்டு பூஜித்தால் அருள் மேவும்

சுக்ரதிசையது முறையாய் வந்தால் செல்வம் குவிந்திடுமே
தக்க களத்திரம் பொன் பொருள் நவநிதி சேர்ந்து கிடைத்திடுமே
சீரங்கத்தில் திருவருள் செய்யும் தேவனை அனுதினமே
சீதள வெண்டாமரை மலரால் பணிந்தால் நலம் வருமே

வினைகளின் விளைவிங்கு விதியென்று பெயர் கொண்டு
சனிபகவன் வடிவாக வருமல்லவோ
சிறிய காகம் ஏறி பெரிய வாழை தந்த
அனுபவம் புவி வாழ்வின் கதையல்லவோ

வருவோர்க்கு அருள் செய்யும் நள்ளாறிலே திருநள்ளாறிலே
குறை தீர்த்து அருளுவான் தீர்க்காயுளே
கருங்குவளை மலரோடு எள் தீபம் ஏற்றி
கழல் பணியலாம் என்றும்
ஈஸ்வரனையே சனீஸ்வரனையே ஈஸ்வரனையே

ராகு கேது இரு தேவர் சென்றமரும் வீடு அவருடைதாதியே
யோக காரகனும் மோட்ச காரகனும் நாகராஜர் வடிவாகுமே
நாகதோஷமது சூழும் போது அதை நீக்கி வைக்கும் திருகாளஹஸ்தி
கருமந்தாரை செவ்வல்லியோடு பணிந்தால் அருள்வாள் சிவசக்தி
பணிந்தால் அருள்வாள் சிவசக்தி பணிந்தால் அருள்வாள் சிவசக்தி

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY