Naana Vambukku Varamatten
Yemaatrathe Yemaarathe
Hero Vijayakanth & Vijayakumar
Music Director Chandrabose
Lyricist Mu.Metha
Singers T.M.Soundarajan
Year 1985
Song Lyrics

நானா வம்புக்கு வரமாட்டேன்டா
அதுதான் பண்பாடு அது
தானா வந்தா விடமாட்டேன்டா
அப்புறம் உன்பாடு
பார்த்தாக்க அப்பாவி பாஞ்சாக்கா சிப்பாயி ( நானா )

நந்திகள் எத்தனை தடுத்தாலென்ன
நந்தன் உள்ளே வருவான்டா உங்க
சிதம்பர ரகசியம் வெட்ட வெளிச்சம்
வெளியே சொல்லி விடுவான்டா

எதிர்நீச்சல் போடத் தெரியும்
எதிர்ப்பாட்டு பாடத் தெரியும்
ஏமாளி வர்க்கம் என்று எண்ணாதே
இட்டதுதான் சட்டம் என்று பண்ணாதே ( நானா )

கையில பையில காசு இருந்தா
கூட்டம் ஆட்டம் போடாதே
அட பொய்க்கால் குதிரை பூட்டிய வண்டி
பத்தடி கூட ஓடாதே

பொல்லாங்கு சொல்லுறது ரொம்ப சுலபம்
பல்லாண்டு பாடுறது ரொம்ப சிரமம்
நல்லாரை எந்நாளும் நையாண்டி செய்யாமே
வாழுற ஒருத்தன் உண்மையில் மனுஷன் ( நானா )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY