Iru Kannil Meenatchiyo
Yemaatrathe Yemaarathe
Hero Vijayakanth & Vijayakumar
Music Director Chandrabose
Lyricist Vali
Singers Malasiya Vasudevan,Vani Jayaram
Year 1985
Song Lyrics

இரு கண்ணில் மீனாட்சியோ
இதழ் கொஞ்சும் தேனாட்சியோ
சிலை நெஞ்சில் நீயாகலாம்
சிறு விழிகளில் செதுக்கிடலாம் ஓஒஹ் ( இரு )

கொடி முல்லை தேடும் நிலா
இவள் கண்ணில் காதல் விழா
ஒரு மன்னன் தாலாட்டவோ
ஒரு கண்ணன் தேரோட்டவோ

நிலவிங்கே நீராடினால்
தினம் இரவுகள் உருகிடுதே
துயர் செய்யும் காமன் உலா
இடை தழுவிட நழுவிடுதே ஓஓஹோ...( இரு )

சுகம் எங்கே கண் கேட்டது
பதில் இங்கே கை காட்டுது
விரல் தொட்டால் போராடுது
உடல் எங்கும் தேனோடுது

முகில் பின்னல் என் மார்பிலே
இனி மனதினில் மழை வருமோ
சுகம் கண்டேன் வாழ் நாளிலே
உனை உரசிய ரகசியமோ ஓஓஹோ..( இரு )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY