Manam Unai Thinam Ninaithadhu
Yaaro Azhaikirargal
Hero Guru & Arunthadhi
Music Director Sankar Ganesh
Lyricist Vali
Singers P.Jayachandran,Vivek Sarathy
Year 1985
Song Lyrics

மனம் உனை தினம் நினைத்தது
கனவினில் அது திளைத்தது
மனதுக்கு என்ன உன் வசம் தானே
கனவுக்கு என்ன அது இலவசம் தானே ( மனம் )

நிலவென நினைத்தது நிலவில்லையா நான்
மலரென நினைத்தது மலரில்லையா நீ
எனக்கென நினைத்தது நிஜமில்லையா
நான் நினைத்தது போல் நீ நினைக்கலையா ( மனம் )

பலருக்கு காதல் தொடர்கதை அது
சிலருக்கு மட்டும் சிறுகதை நீ
எழுதுகின்றாய் இன்று புதுக்கதை
அது எனக்கு மட்டும் ஏன் விடுகதை ( மனம் )

ஆற்றுக்கும் கடலுக்கும் அலை உறவு
என் காதலும் கவிதையும் நிலை உறவு
உன் அழகுக்கும் அறிவுக்கும் இலை உறவு
நீ இல்லையென்றால் என் நிலை துறவு ( மனம் )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY