Indha Iravil Naan Paadum
Yaaro Azhaikirargal
Hero Guru & Arunthadhi
Music Director Sankar Ganesh
Lyricist Vali
Singers P.Jayachandran
Year 1985
Song Lyrics

இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல்
உன் உறவை நாடும் எந்தன் மேனி
நான் உணவை தேடும் ஒரு தேனி
பருவ ராகம் ஒன்று பாடி
என் பக்கம் பறந்து வாடி.... ( இந்த )

கண்ணே என்று உன்னை அழைக்க
ஒரு காலம் வருமோடி அணைக்க
பெண்ணே பூவை உனை நினைத்து
படும்பாட்டை எங்கு நான் உறைக்க ( இந்த )

தொட்டால் சுடுவதிந்த நெருப்பு
நீர் பட்டால் அணைந்துவிடும் அமைப்பு
தொட்டால் அடங்குமென் கொதிப்பு
நீ ..தொட்டால் அடங்குமென் கொதிப்பு
அடி தோழி இன்னுமேன் மிதப்பு
அடி தோழி இன்னுமேன் மிதப்பு.. ( இந்த )

நேயம் வைத்தவனை நெஞ்சில் வைத்துவிடு
நெஞ்சம் இல்லை எனில் நஞ்சை வைத்துவிடு
காயம் அழிவதற்குள் கண்ணே
உன் அழகை கண்கள் பார்த்து
வந்த காயம் போக்கிவிடு....... ( இந்த )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY