Sangam Muzhangi Varum

Hero | T.R.Mahalingam |
Music Director | K.V.Mahadevan |
Lyricist | A.Maruthakasi |
Singers | P.Suseela,T.R.Mahalingam |
Year | 1960 |
Song Lyrics
சங்கம் முழங்கி வரும் சிங்காரத் தமிழ்க் கலையே
இன்பம் உருவாகப் பொங்கும் அன்பின் அலையே
சிந்தும் இசையமுதம் தென்பொதிகைத் தென்றலோ
செங்கரும்போ கனிரசமோ தேன்குயிலின் கொஞ்சலோ (சங்கம்)
கண்ணே சகுந்தலையே கண்கவரும் ஓவியமே
கணமும் உனை மறவேன் என் காதல் காவியமே
மன்னவரே ஏழைக்கு வாழ்வளித்த தெய்வமே
என் உயிரே இன்று முதல் உமக்கே தான் சொந்தமே (சங்கம்)
பெண்ணே மும்தாஜே பேரழகின் பிம்பமே
பேசும் பிறை நிலவே என் வாழ்வின் இன்பமே
என் மனதில் கொஞ்சிடும் இனிப்பான எண்ணமே
எந்நாளும் அழியாது நம் காதல் சின்னமே (சங்கம்)

COMPILED AND UPDATED BY