Deiveega Malarallava
Meenakshi Thiruvilaiyadal
Hero Vijayakanth
Music Director M.S.Viswanathan
Lyricist Tamizh Nambi
Singers Vani Jayaram,K.S.Chitra
Year 1985
Song Lyrics

தெய்வீக மலரல்லவா
நீ தேயாத நிலவல்லவா
மதுராபுரி மன்னன் மனதில் பால் வார்த்த
மாணிக்கம் நீயல்லவா நீ
மலைமகள் வடிவல்லவா ஆஆஆ..(தெய்வீக)

நாடெங்கும் துயர் தீர்க்கும் அருள் வெள்ளமே
நல்லாட்சி உன்னாலே உருவாகுமே
அறிவான திருக்கோயில் கலைச் செல்வமே
அருள் ஞானம் உன்னாலே அரங்கேறுமே....( தெய்வீக )

மான்கள் சதிராட மீன்கள் இசை பாட
மலரும் குமுத விழியே
நன்னாளிது பொன்னாளிது
கண்ணால் உனக் கண்டால் வினை தீர்ந்திடுமே

படை கொண்டு ஜெயம் கொண்டு
திசை எங்கும் புகழ் கொண்டு வாழியவே
நீதி குலையாமல் நேர்மை கலையாமல்
பொங்கும் புவி ஏழும் வாழ்ந்திடுமே

இமவான் மகளே இசையின் வடிவே
எழுவாய் தமிழே
புன்னகை சிந்திடும் பூவிழி கொண்டவள்
பொன்மணி சித்திரம் படாத கை

கும்பிடும் நல்லவர் நம்பிடும் உத்தமர்
யாரையும் துன்பத்தில் விடாத கை
திருமுகம் பங்கஜம் கனியிதழ் குங்குமம்
திருவடி தஞ்சமாம்.....(தெய்வீக)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY