Aadaiyil Aadum Ponmanigal
Raja Rishi
Hero Sivaji Ganesan Prabhu
Music Director Ilayaraja
Lyricist Pulamai Pithan
Singers S.Janaki
Year 1985
Song Lyrics

ஆடையில் ஆடும் பொன் மணிகள்
ஆசையில் ஆடும் கிங்கிணிகள்
கை வளை ஆட மை விழி ஆட
காதல் நெஞ்சம் ஆடுமே மஞ்சம் தேடுமே (ஆடையில்)

குக்கு குகு கூ கூ கூ என்று குயில் கூவாதோ
சொர்க்க சுக லோகத்தில் ராகம் வருமே
தத்த தத தா தா தா நித்தம் உனை நீ தா தா
தத்தை இவள் பாதங்கள் தாளம் இடுமே

உந்தன் அருகே வந்து தழுவும் இன்ப நிலையம்
எந்தன் இடை தான் சொர்கபுரியே என்று புரியும்
பட்டுத் துகில் இது கலைந்தாடி வர
ஆசை சிறகினை விரிக்கின்றதே

தொட்டுத் தழுவிடும் சுகம் கோடி பெற
தோகை இள மனம் துடிக்கின்றதே
இவள் ஒரு சிறு கிளி ஒரு கொடி இரு கனி
குலுங்கிட நடமிடும் அபினய அழகு...( ஆடையில்)

என் உடல் இது பொன் நிற அரவிந்தம்
ஏங்கிடும் இடை தாங்கிட வரலாம்
எங்கிலும் இதில் சிந்திடும் மகரந்தம்
நித்தமும் அதில் முத்திரை இடலாம்

அஞ்சன நிறம் கொஞ்சிடும் இரு கண்கள்
ஆயிரம் கலை கூறிட வருமே
அந்தியில் வரும் இந்திர தனுசின்று
பார்த்தவர் விழி பூத்திட வருமே

மறை பயிலும் தவ முனியே
கலை பயில்வோம் வா
மது ரசமா இதழ் ரசமா நவ ரசமா வா
மாமுனி என வாழுவதா ஞானம்

காமனின் கலை தேறுவதே ஞானம்
நான்மறைகளை ஓதுவதா இன்பம்
நான்மறைவினில் கூடுவதே இன்பம்
மங்கையும் ஒரு கங்கையும் தலை மீதினில்

கொண்டவன் சுகம் கண்டவன் சிவனே
முதலிது முடிவிது இதிலெது வருவது வா...
இகம் இது பரம் இது அது தரும் சுகம் இது வா...
தவம் இது வரம் இது அறிவிது அருளிது வா வா...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY