Sankara Siva sankara
Raja Rishi
Hero Sivaji Ganesan Prabhu
Music Director Ilayaraja
Lyricist Vali
Singers Malasiya Vasudevan
Year 1985
Song Lyrics

சங்கரா சிவ சங்கரா
ஜெய ஜெய சந்திர சேகரா
திருமுனிவன் தலை முடியில்
இரு கரமும் சேவடியில்

திரிகளென எரிய விட
உதிரம் எனும் எண்ணெய் இட
நான் படைத்த மெய் விளக்கு தேவா
ஞான தீபம் ஏற்றி வைக்க வா வா
சங்கரா சிவ சங்கரா
ஜெய ஜெய சந்திர சேகரா

தவமே எந்நாளும் சிவமாக
சிவமே என் வாழ்வின் தவமாக
புலன் ஐந்தும் எந்தன் வசமாக
புரிந்தேனே யோகம் பணிவாக

நீலகண்டன் காலகண்டன் திருவடி
காலை மாலை ஏற்றுகின்ற தவமுனி
மீண்டும் மீண்டும் வேள்வி செய்து முறையொடு
யாண்டும் இங்கு வேண்டுகின்ற வரம் கொடு
ஐந்தடுக்கில் வாழுகின்ற தேவா
ஐமுகத்து தீபம் ஏற்ற வா வா....( சங்கரா )

வண்ணச் சுடர் வரத் தவம் இயற்றும்
தனை வருத்தும் உடல்
மெல்லக் கருகிடத் திருவிளக்கில்
தெறித்திடட்டும் கனல்

சத்திய ஒளி இங்கு எழுந்திட
தத்துவ முனி உடல் அழிந்திட
ரத்தமும் நதி எனப் பெருகிட
சித்தமும் சிவம் என உருகிட

அனலேந்தும் பெருமானே வருக
திரி ஐந்தில் கனல் மூட்டித் தருக
பிறை ஏந்தும் பெரியோனே வருக
குறை தீர்க்க விளக்கேற்றித் தருக

ஆடிய திருவடி சரணம்
அம்பலவாணனே சரணம்
உமையவள் தலைவனே சரணம்
உலகத்து முதல்வனே சரணம்

திருமேனி திரியாக எரிய
இறைவா உன் அருள் ஆணை இடுக
தவமான தவம் இங்கு புரிய
சிவமே நின் கருணைகள் பொழிய

ஹரஹர சிவசிவ சிவசிவ ஹரஹர
மறை தொழும் இறை அவன்
அடியவர்க்கினியவன் சிவனே
அழைத்ததும் உடன் வந்து

அடைக்கலம் கொடுக்கின்ற அறனே
எனக்கொரு கதி இல்லை
உனையன்றி விதி இல்லை இறைவா
கரிசனம் பிறக்கட்டும்
தரிசனம் கிடைக்கட்டும் தலைவா... இறைவா..
சிவனே... ஹரனே... சிவனே... ஹரனே...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY