Poda Munivane Unathu
Raja Rishi
Hero Sivaji Ganesan Prabhu
Music Director Ilayaraja
Lyricist Vali
Singers Malasiya Vasudevan
Year 1985
Song Lyrics

போடா முனிவனே உனது பூர்வாங்கம்
பிழையாய் பேசுதே மனித ராஜாங்கம்
மேலென்றும் கீழென்றும் பிறவி ஏது
ஞாலத்தில் எனைப் போன்ற துறவி ஏது
மூவர்க்கும் தேவர்க்கும் அறிவென்ன குருடானதோ

புயலென எழுந்ததடா
புவியில் கௌசிகன் ஆத்திரமே
பொடி படப் போகுதடா
மனிதன் எழுதிய சாத்திரமே

அலை எழும் கடல் இது
அணை இட இங்கு யாரால் ஆகுமோ
விழி எழும் கனல் இது
உலகெங்கும் இனி நீராய்ப் போகுமோ
நெஞ்சில் ஒரு வஞ்சம் தர முனிவனின்
பொன் பட்ட எண்ணங்கள் புண்பட்ட வேகத்தில் (புயலென)

பிரம்மனொடு மறை தொழும் அரிஹனும்
பிரம்ம ரிஷி இவனென அருளியதேன்
நித்தம் ஒரு தவமென பழகியவன்
சித்தம் ஒரு மெழுகென உருகுவதேன்

சுட்ட வடு எளிதினில் மறைந்திடுமோ
சத்திரியக் குலம் என்ன குறைந்ததுவோ
இத்தனையும் நடுங்கிட சபித்திடவோ
அத்தனையும் கருகிட அழித்திடவோ

தத்துங்கடல் அலை புரள கரைகள் கடந்திடவும்
அலைகள் உடைந்திடவும் சிதற
எட்டுத் திசை நிலமதிர மலைகள் பொடி படவும்
மரங்கள் இடி படவும் உதிர

இரவென்ன பகலென்ன மதியென்ன கதிரென்ன
சகலமும் உலகத்தில் மறையட்டுமே
முதலென்ன முடிவென்ன பிறப்பென்ன இறப்பென்ன
முனிவனின் தவப் பலம் தெரியட்டுமே

சிவம் எது தவம் எது நெறி எது முறை எது
குலம் எது குணம் எது இனம் எது
அது இனி மேல் புவி மேல்
ஜனனம் மரணம் வருமோ...

ஆறாது ஆறாது என் கோபமே ஆ... ஆ... ஆ... ஆ...
தீராது தீராது என் தாபமே..ஆ... ஆ... ஆ... ஆ...
அறம் கொன்ற புவி என்றும் சாக்காடு தான்
அனல் வந்து சூழ்கின்ற தீக்காடு தான்

நிலம் கொண்ட சவம் யாவும் வெளியேறுக
புதையுண்ட உடல் யாவும் எழுந்தாடுக
நிலம் கொண்ட சவம் யாவும் வெளியேறுக
புதையுண்ட உடல் யாவும் எழுந்தாடுக....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY