Bannari Ammane Un
Raja Gopuram
Hero Pandiyan
Music Director Ilayaraja
Lyricist Gangai Amaran
Singers Malasiya Vasudevan
Year 1985
Song Lyrics

பட்டுடுத்தி ஊரையெல்லாம் சுத்தி வலம் வாரவளே
வயசு வந்த வாலிபர வளைச்சிழுத்து போறவளே
பாப்போமா உன் பழைய கதையை
படம் புடிச்சு பாப்போமா ஆஹாஹா......

பண்ணாரி அம்மனே உன் பேர நம்பினேன்
நன்மையை செய்யவே நான் பூஜை செய்யுறேன்
எல்லோரும் வாழணும் இன்னல்கள் போகணும்
எந்நாளும் பூமிய இன்பந்தான் ஆளணும்....

பகலாகி இரவாகி தடுமாறி வழி மாறும் பூமி
பல பேர மனம் மாற்றி
ஒழுங்காக்கு உலகாளும் சாமி
பக்கபலம் நீயிருந்தா மத்த பலம் தேவையில்லை
பக்தியுடன் தேடி வந்தா பஞ்சமெல்லாம் தீருமம்மா (பகலாகி)

நாடு நல்லாருக்கு ஏழைக்கெல்லாம் டல்லாருக்கு
வாழ்வு பொல்லாருக்கு சாமியெல்லாம் கல்லாருக்கு
ஆத்தா கண்ணு பாத்தா தாப்பா தொறந்திடும்
சோறு தின்ன ஏங்கும் நெலம மறைஞ்சிடும்
ஹே..சீக்கிரம் வழிக் காட்டு
எங்க வீட்டுல ஒளி ஏத்து ஹே ஹேய்....(பகலாகி)

கூட்டமா நிக்கிற பையன்களா...ஆங்....
ஒரு கோளாறு சொல்றேன் செய்யுங்கடா
கும்முன்னு நிக்கிற பாப்பம்மா சேதிய
கூட்டத்தில வந்து சொல்லுங்கடா
ஏய்....பாப்பம்மா மொறச்சு பாக்குறா வாங்கடா ஓடலாம்....

பாதை முள்ளாருக்கு மேடு பள்ளம் கல்லாருக்கு
ஏதும் இல்லாருக்கு ஏக்கம் மட்டும் புல்லாருக்கு
துணிஞ்சா தடையும் ஓடையும்
எதுக்கும் வறுமை மடியும்
எப்போ பொழுது விடியும் ஏக்கம் எப்போ ஒழியும்
ஹேய்....சாமிதான் பதில் கூறு
செழிப்பாகணும் எங்க ஊரு...ஹேஹே ஹேய்...(பகலாகி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY