Veenai Enadhu Kuzhanthai
Oonjalaadum Uravugal
Hero Jaisankar & Suresh
Music Director Ilayaraja
Lyricist Vairamuthu
Singers P.Suseela
Year 1985
Song Lyrics

வீணை எனது குழந்தை – அதில்
மீட்டும் சுரங்கள் மழலை.......
மடி மீது நான் வைத்து தாலாட்டுவேன் அதில்
மகரந்த ராகங்கள் நான் மீட்டுவேன் (வீணை)

அடடா எனக்கின்று சிறகொன்று முளைக்கின்றதே
விரல்கள் அசைத்தாலே சுரங்களின் ஊர்கோலம்
விழித்தே இருந்தாலும் கனவுகள் ஏராளம்
மனதுக்குள் மழை விழும் அனுபவமோ.....

வான் மீது போகின்ற மேகங்களே
இசை கேட்க எனைத் தேடி வாருங்களேன்
என் வீணை பொன் வீணை
உறங்காமல கண் மூடி சுருதி சேர்க்கின்றேன்
உயிரெனும் தீபத்தில் நெய் வார்க்கின்றேன் ( வீணை )

வாழ்வே கனவினில் வரைகின்ற நீர்க்கோலமே
இருக்கும் வரையிங்கே இசையொரு சந்தோஷம்
நிலமே மறைந்தாலும் நிலைப்பது சங்கீதம்
ஸ்வரங்களே வரங்களாய் திரிகின்றதே.......

விழியோரம் துளியொன்று திரள்கின்றதே
என் வீணைதனில் வந்து விழுகின்றதே
இது போதும் இசை போடும்
செவிஎங்கும் அமுதாக நான் பாய்கின்றேன்
புவியெங்கும் இசையாக நான் கேட்கின்றேன் ( வீணை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY