Poongkodiye Kai Veesu
Oonjalaadum Uravugal
Hero Jaisankar & Suresh
Music Director Ilayaraja
Lyricist Vairamuthu
Singers SP. Balasubramaniam,P.Suseela
Year 1985
Song Lyrics

பூங்கொடியே கை வீசு
புது மலரே வாய் பேசு
ஒரு கிளி தழுவுது தோளோடு
சிறு கிளி உருளுது மார்போடு
குடும்பமே அழகிய கிளிக்கூடு

காற்றடித்து இந்த கூடு கலையாது
வெண்ணிலவு தண்ணிப்பட்டு அணையாது
பூங்கொடியே கை வீசு புது மலரே வாய் பேசு...

ம்ம்மம்ஹூம்ம்ம்மம்ஹூம்.....
என்னை உன்னை எல்லாம் இங்கே பிரிந்து
அம்மா அப்பா எங்கே போனார் பறந்து
சின்னஞ்சிறு பிள்ளைகளை மறந்து
என்ன இது காட்டுக்குள்ளே விருந்து

அப்பாவுக்கு கன்னத்திலே சிவப்பு
அம்மாவுக்கு நெஞ்சுக்குள்ளே சிரிப்பு
அம்மாவுக்கும் அப்பா போலே முத்தம் போடு
தேனெடுக்கும் வண்டு போலே சத்தம் போடு
பூங்கொடியே கை வீசு புது மலரே வாய் பேசு

வெண்ணிலவு நம்மை கண்டு மயங்கும் அந்த
நட்சத்திரம் மண்ணில் வந்து இறங்கும்
சின்ன சின்ன சிறகுகள் முளைக்கும்
மண்ணை விட்டு விண்ணிலெங்கும் பறக்கும்

மேகத்தோடு போட்டியிட்டு அடங்கும்
மீண்டும் இந்த கூட்டில் வந்து உறங்கும்
காற்றடித்து இந்த கூடு கலையாது
வெண்ணிலவு தண்ணிப்பட்டு அணையாது..(பூங்கொடியே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY