Sandha Kadaiya Saraya Kadaiya
Meendum Parasakthi
Hero Sivakumar
Music Director Ilayaraja
Lyricist Gangai Amaran
Singers Malasiya Vasudevan,S.P.Shailaja
Year 1985
Song Lyrics

சந்தக் கடையா சாராயக் கடையா
கைய விடுய்யா கம்முன்னு கெடையா
சொந்ததுக்குத்தான் துணையும் இருக்குது
சோதன போட இடமும் இருக்குது
நீ காத்திருந்தா நரச்சு போகும்
காலம் போனா மறந்து போகும்...(சந்தக்)

இடுப்பப் பாரு துடுப்போல சிறுத்து இருக்குது
உடுப்புக் கூட விருப்பம் போல புடுச்சி இருக்குது
தொட்டு தொட்டு இழுக்கும்
அந்த மயக்கம் பொண்ணு பழக்கம்
தொல்லைகள் மறக்கும் இன்பம் பிறக்கும் உனக்கும்

கை வசத்துல பல வேல இருக்கு
கட்டிப் புரள பூஞ்சோலை இருக்கு
வெளக்கு ஏத்தும் நேரமாச்சு
விருந்து போட மறந்து போச்சு...(சந்தக்)

பசிக்கும்போது ருசிக்கு தின்னு பசியைத் தீருங்க
வயசு போகும் போது நீங்க வழிய மாத்துங்க
சந்தனத்து ஒடம்பு அது அரும்பு அடி கரும்பு
சம்மதிச்சு நெருங்கு அட இதுதான் விருந்து

சொல்லித் தரவா சொல்லாம வரவா
சொர்க்கம் பெறவா தோதான உறவா
சொகத்தப் பாத்து சோலி போடு
பிடிச்சதுன்னா வேலி போடு...(சந்தக்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY