Kaanal Neera Kanava
Meendum Parasakthi
Hero Sivakumar
Music Director Ilayaraja
Lyricist Naa.Kamarasan
Singers S.Janaki
Year 1985
Song Lyrics

கானல் நீரா கனவா வாழ்வா
மாலை தொடுக்கும் நேரம்
மலரே சருகாய் போகும்
இவள் வாழும் நாளெல்லாம்
தினம் சோகம் தானம்மா.......(கானல்)

சின்னக் குயிலே செல்லக்கிளியே
கண்ணின் மணியே கலங்காதே
என்ன விதியோ என்ன கதையோ
கண்கள் அழுதே செல்லும் நதியோ

ஒரு ஏழைக் சோகமே அது தேயும் நேரமோ
மனம் வாடும் கோலமோ இது தேவன் லீலையோ
கடலே இளங்காற்றில் சோகம் பாடும் சித்திர முத்தமிழே
ஒரு பூவாகும் மனம் தீயாகும் சந்தன மல்லிகையே...(கானல்)

தென்றலதுவே வந்த புயலே
எந்தன் அழகே சுமைதானோ
அந்தி பொழுதே மஞ்சள் நிலவே
அந்தப்புரமே பகைதானோ

மலர்ச்சோலை வாடுதே மலர் வாசம் போனதே
கரை காணும் போதிலே அலை மோதும் ஓடமே
கடலே இருள் மூடும் ஆசை வானில் வந்தது சந்திரனே
இனி நாள்தோறும் சுகம் தாலாட்ட விடிவெள்ளியும் வந்திடுமா (கானல்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY