Kaattukkulle Kaliyamma
Meendum Parasakthi
Hero Sivakumar
Music Director Ilayaraja
Lyricist Vairamuthu
Singers Ilayaraja
Year 1985
Song Lyrics

காட்டுக்குள்ளே காளியம்மா
கோயில் ஒண்ணு கண்டேனே
பொங்க வைக்க வந்தேனே
அடி ஆத்தா நீ பாத்தா
வெய்யில் அடிக்கும் மழை அடிக்கும்
திரிசூலம் எடுப்பாயா தீமையை அழிப்பாயா...(காட்டுக்குள்ளே)

வா காலம் கெட்டுப் போச்சு தாயே
காளியாத்தா காப்பாத்து
உள்ளே நீயும் ஓரங்கிகிட்டு இருந்தா
ஒனக்கும் கூட ஆபத்து
சாமியாடினா...அட பூமியாடுமே

சுத்தி சுத்தி வந்தேன் சத்தியத்த தேடி
உத்தமியே உந்தன் பக்தியிலே பாடி
ஓங்காரி ஆணையிடு நீதிக்கு காவலிரு ஆத்தா
காட்டுக்குள்ளே காளியம்மா.......

எத்தனையோ பூச பண்ணி
சக்திகள வாங்கிருக்கேன்
நான் செஞ்சதெல்லாம் நல்லதுதான்
செய்யாட்டி அட கெட்டதுதான்

கோழி முட்ட வாங்கி வந்து
மந்திரிச்சு வச்சிருக்கேன்
வேலைகளை சொல்லிவிடு
சீக்கிரமா வந்து விடு...

கெட்ட செயல் செய்ய நீயும்
கட்டுப்பட மாட்டாயா
கெட்டவனும் வந்தா நீயும்
விட்டு விட மாட்டாயா

வேலை ஏந்தியே அடி ஆடு காளியே
நான் கையில் உடுக்கெடுத்தா கதி கொஞ்சம் கலங்கும்
சுத்தமில்லா ஆளுக்கும் சுருதி கொஞ்சம் இறங்கும்
ஓங்காரி ஆணையிடு நீதிக்கு காவலிரு ஆத்தா..(காட்டுக்குள்ளே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY