Pachcha Paasi Pavala Paasi
Hello Yaar Pesurathu
Hero Suresh
Music Director Ilayaraja
Lyricist Gangai Amaran
Singers Malasiya Vasudevan,S.P.Shailaja
Year 1985
Song Lyrics

பச்சை பாசி பவள பாசி
விக்க வந்தோம் ஆயாலோ
வாங்க வாங்க ஆயாலோ
பாட்டு பாடி ஆட்டம் ஆடி
பசியை தீர்ப்போம் ஆயாலோ
ரசிக்க வாங்க ஆயாலோ
ஆங்....சைல் ஆங்.....சைல்...

இலவம் பஞ்சு போல உடம்பு
இழுக்கலாச்சு ஆயாலோ
தழுவி போக வாராளோ
இடுப்பப் பார்த்தா துடுப்ப போல
சிலிர்த்து இருக்கு ஆயாலோ
பொருத்தம் இருக்கு ஆயாலோ
ஆங்....சைல் ஆங்.....சைல்...

வெட்டி பேச்சு பேசி பேசி
கிட்ட வருதே ஆயாலோ
கட்டிப் புடிக்க ஆயாலோ
கட்டிப் புடிச்சா வேலவெட்டி
கெட்டுப் போகும் ஆயாலோ
எட்டிப் போங்க ஆயாலோ
ஆங்....சைல் ஆங்.....சைல்..ஸல்

ஓலப்பாய விரிச்சு போட்டு
ஒரசி படுப்போம் வா சிங்கி
ஒனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்கு
மனசு போல வா சிங்கி

ஊரு முழுக்க நம்ம பத்தி
பேசும் கீசும் போ சிங்கா
ஒரசிப் படுக்க வேளை வரட்டும்
இப்ப வேணாம் போ சிங்கா

தங்கத்தாலே செயினு செஞ்சி
போட்டு உடுறேன் வா சிங்கி
பொழுது போச்சு வா சிங்கி

தங்கம் வேணாம் செயினும் வேணாம்
பாசி போதும் போ சிங்கா
பவுசு வேணாம் போ சிங்கா
ஆசெல்லம் ஆசெல்லம் ஆசெல்லம்....

மனசும் மனசும் சேர்ந்த பிறகு
மறுக்க வேணாம் ஏ சிங்கி
புனுகு மணக்கும் புடுச்ச ஒடம்பு
எனக்கு வேணும் வா சிங்கி

உருளகெழங்கு போல ஒடம்பு
ஒனக்குத்தானே போ சிங்கா
ஒழச்சு ஒழச்சு களச்ச ஒடம்பு
தவிச்சு கெடக்கு போ சிங்கா

பச்சை பாசி பவள பாசி
விக்க வந்தோம் ஆயாலோ
வாங்க வாங்க ஆயாலோ

பாட்டு பாடி ஆட்டம் ஆடி
பசியை தீர்ப்போம் ஆயாலோ
ரசிக்க வாங்க ஆயாலோ
ஆங்....சைல் ஆங்.....சைல்.......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY