Naal Nalla Naal
Hello Yaar Pesurathu
Hero Suresh
Music Director Ilayaraja
Lyricist Vairamuthu
Singers S.Janaki
Year 1985
Song Lyrics

நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள்
நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள்
உறவுகள் பிறந்த நாள் உலகமே மறந்த நாள்
கருவறையில் தீபம் ஏற்றினாள் உருகினாள் (நாள்)

காமதேவன் அன்று உன் மேல்
புள்ளி வைத்ததென்ன
காலமென்னும் தேவன் உன் மேல்
கண்கள் வைத்ததென்ன
கண்ட கதையை கட்டில் சொல்லுமே
நீ சொல்லி வைக்க வேண்டாமா

இனி தொட்டிலிட்டு தாலாட்டு ஆ...ஆஆ.ஆஆ..
மறுபடியும் கட்டிலிட்டு பாராட்டு
நலம் யாவும் வந்து சூழ்க
மலர் மஞ்சள் தினம் வாழ்க இந்த (நாள் நல்ல)

கருவில் தீபம் ஏற்றி நானே
கோயிலாகி போனேன்
தாய்மை கொண்டதாலே
இன்று ரெண்டு ஜீவனானேன்
வானவில்லிலே மின்னல்களினால்
தொட்டில் கட்ட மாட்டடேனோ

இந்த பூவுக்குள்ளே போராட்டம் ம்ம்ம்ம் ஆஆ
அடி வயிற்றில் சின்ன சின்ன தேரோட்டம்
இவள் வாழ்வே தவமாகும்
வரும் பிள்ளை வரமாகும் இந்த (நாள் நல்ல)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY