Vazha Kuruthazhage
En Selvame
Hero Suman Talwar
Music Director Ilayaraja
Lyricist Gangai Amaran
Singers S.Janaki
Year 1985
Song Lyrics

வாழக் குருத்தழகே வாட்டி வச்ச பொன்னழகே
என் மாலை கழுத்தழகே மத்தியான பூவழகே
தாலி நீ முடிக்க தவமா தவமிருந்தேன்
ஓல கொடுக்காமலே ஒத்த வழி போனீகளே..

கோடி துணி உடுத்தி கூட்டத்திலே நின்னீங்கனா
கோடி ஜனம் மயங்கும் கூடலூரு கண்ணு படும்
ஜவுளி கட அடச்சு ஜாதி சனம் வாயடச்சு
தனியா போறீகளே என் ஆசையுள்ள என்னவரே
ஐயா மன்னவரே.....

சிரிச்ச முகத்தழகும் செவந்த ஓதட்டழகும்
மயக்கும் கண்ணழகும் வாராத சொல்லழகும்
உள்ள என் மன்னவரே உத்தமரே நல்லவரே
உக்கார்ந்த எடத்துலேயே உசுர மறந்தவரே
ஐயா மன்னவரே.....

குங்கும பொட்டு வச்சா குறுகுறுன்னு பாப்பீகளே
மஞ்சதான் நான் குளிச்சா மாதிரியா நிப்பீகளே
மல்லியப்பூ நான் முடிச்சா மயங்கி முழிப்பீகளே
என்னான்னு பொட்டு வைப்பேன்
எப்படித்தான் பூ முடிப்பேன் நீங்க போன பின்னாலே..

ஏழு ஊரு பண்ணையிலும் உங்க போலே ஆளேது
இந்த முகம் பாக்காமே நானிருந்த நாளேது
தூங்கா வெளக்கு வச்சு துணைக்கு இருந்தவரே
தேங்கா ஒடச்சது போலே சில்லாப் பறந்தீகளே

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY