Kaalam Neram Kaninthu
En Selvame
Hero Suman Talwar
Music Director Ilayaraja
Lyricist Panju Arunachalam
Singers S.Janaki,Malasiya Vasudevan
Year 1985
Song Lyrics

காலம் நேரம் கனிந்து வரும்
காதல் தேனாகும்
இரு விழியும் ஒரு மொழியில்
கலந்து நல் உறவாடும்..ம்ம்ம்ம் (காலம்)

பாலினாலே மூடி வைத்த
பளிங்கு போன்ற கோதை
பார்த்து பார்த்து ஆசைக் கொண்டு
பழக சொல்லும் பூஜை

பனியில் ஆடும் பூக்கள் கொண்ட
பாவை மேனியில்
பருவக் கால கோலம் போடும்
ஜாலம் என்னவோ
மாலை இன்ப மாலை
கொஞ்சும் வேளை வந்ததே....(காலம்)

பேசி பேசி என்ன லாபம்
ஏக்கம் என்று தீரும்
மாலை சூடி மஞ்சம் காணும்
நாளும் என்று சேரும்

எண்ணி எண்ணி ஏக்கம் கொண்டு
வாடும் போதிலே
தொட்டு தொட்டு ஜாடை சொல்லி
ஆடும் ஜோடியே
கூடும் இன்பம் நாடும் அந்த வேளை வந்ததே (காலம்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY