Anbe Deivam Endre
En Selvame
Hero Suman Talwar
Music Director Ilayaraja
Lyricist Panju Arunachalam
Singers Radhika
Year 1985
Song Lyrics

அன்பே தெய்வம் என்றே சொன்னாரே – இங்கு
எல்லா உயிரும் ஒன்றே என்றாரே
அது பொய்தானா இல்லை மெய்தானா
முருகா....முருகா.....முருகா.....முருகா......(அன்பே)

வேலும் மயிலும் துணை என்றாரே
விநாயக சாமி துணை என்றாரே
நீ உயிரைக் காக்கும் தெய்வம் என்றாரே
அது உண்மையென்றால் உன்னை கொல்வாரோ
பாசம் வைப்பதே மோசம் செய்யவா
என் கண்ணே அன்பு துணையே
உன்னை தெய்வம் காக்குமே....(அன்பே)

அன்பு தெய்வம் பலி கேட்காதம்மா
கேட்டால் இங்கு மனம் தாங்காதம்மா
பூஜை செய்ய தேங்காய் தருவேன் தினம்
பாலும் பழமும் நெய்யும் தருவேனே
ஒண்ணே ஒண்ணு தான் நானும் கேட்கிறேன்
என் அன்பே இந்த உயிரை
என்றும் நீயே காக்கணும்...(அன்பே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY