Muthu Muthu Pacharisi
Then Koodu
Hero Suresh & Major Sundarrajan
Music Director Ghantasala Vijayakumar
Lyricist Pulamai Pithan
Singers S.Janaki
Year 1984
Song Lyrics

முத்து முத்து பச்சரிசி மாக்கோலமாம்
வண்ண வண்ண புதுக் கோலமாம் ஹோய்
நெஞ்சில் இன்ப ஊர்கோலமாம்
ஓஒ..ஹோய்.....ஓஹோஹோ...ஹோய்...(முத்து)

கல்யாண காலத்தில் மணக்கோலமாம்
மணமக்கள் எழில் கோலமாம்
வரும்போது தேர் கோலமாம் ஆஆ....
ஈரைந்து மாதத்தில் இடும் கோலமாம்

பொன்னூஞ்சல் எனும் கோலமாம்
பூ ஒன்று அதில் ஆடுமாம் ஆரிராரோ ஆரிராரோ
வீடெங்கும் நாகபந்த கோலமாம்
பந்தகள் உண்டாக்குமாம்
நெஞ்சங்கள் ஒன்றாகுமாம் (முத்து)

கார்த்திகை நன்னாளில் திருக்கோலமாம்
தீபத்தின் மணிக் கோலமாம்
தெருவெங்கும் ஒளிக் கோலமாம்
தைப் பொங்கல் திருநாளில் மலர்க்கோலமாம்
தாழம்பூ மணக்கோலமாம்

தங்கத்தில் தேர்க் கோலமாம்
தென்பாண்டி மன்னவனின் ஆட்சியில்
கொடிஎங்கும் மீன் கோலமாம்
அது எங்கள் பொற்காலமாம்.....(முத்து)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY