Samaiyal Enbathoru Thathuvam
Then Koodu
Hero Suresh & Major Sundarrajan
Music Director Ghantasala Vijayakumar
Lyricist Vairamuthu
Singers SP. Balasubramaniam
Year 1984
Song Lyrics

சமையல் என்பதொரு தத்துவம் அதை
செய்து பார்ப்பது உத்தமம் உத்தமம்
அடுப்பங்கரைகள் சரியா இருந்தால்
படுக்கை அறைகள் சரியாகும்
அடுப்பங்கரையில் கோளாறென்றால்
படுக்கை அறையோ இரண்டாகும் (சமையல்)

அரிசியிலிருந்து கல்லை எடுப்பது அந்தக் காலமடி
கல்லிலிருந்து அரிசியை எடுப்பது இந்தக் காலமடி
காயை நறுக்கும்போது கண்ணே கையை நீயும் நறுக்காதே
கவனம் சிதறி போனால் இங்கே குடும்பம் நடக்காதே
குடும்பம் நடக்காதே (சமையல்)

காரம் மிகுந்து போனால் பெண்ணே
சமையல் ருசிக்காது
கோபம் மிகுந்து போனால் அன்பே
குடும்பம் இருக்காது

எல்லாம் சரியாய் சேராவிட்டால்
கூட்டும் குழம்பும் மணக்காது
கூட்டுப் பறவைகள் சேராவிட்டால்
கூட்டு குடும்பம் நடக்காது
கூட்டு குடும்பம் நடக்காது.......(சமையல்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY