Santhikka Thudithen Ponmane
Vedham Pudhithu
Hero Sathyaraj & Raja
Music Director Devendran
Lyricist Vairamuthu
Singers SP. Balasubramaniam,S.Janaki
Year 1987
Song Lyrics

சந்திக்க துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
சந்திக்க துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா

உன்னை எண்ணி உள்ளம் வாடும்
கண்கள் ரெண்டும் சண்டை போடும்
கண்ணே மனம் இல்லையா
காவல் விடவில்லையா....(சந்திக்க)

முன் வைத்த காலை பின் வைப்தென்ன
நடுக்கம் பிறக்கின்றதோ..ஓ
இலைகள் அசையும் ஒலியில் கூட
இதயம் துடிக்கின்றதா

அச்சத்தில் பாதி ஆசையில் பாதி
அச்சத்தில் பாதி ஆசையில் பாதி
பெண்மை நடக்கின்றதா

உள்ளம் எங்கும் வெள்ளம் ஓடும்
மௌனம் கூட சத்தம் போடும்
ஜீவன் தவிக்கின்றதா தேகம் கொதிக்கின்றதா (சந்திக்க)

கங்கையை தேடி காவிரி நடந்து
கலக்க வருகின்றதோ
காதலின் நதிகள் கலக்க துடித்தால்
மேடு தடுகின்றதோ

நதிகள் இரண்டும் தாகம் எடுத்து
நதிகள் இரண்டும் தாகம் எடுத்து
குடிக்க துடிக்கின்றதோ

காதல் இன்றி வாழ்வே இல்லை
காதல் கொண்டால் சாவே இல்லை
பெண்மை சிலிர்க்கின்றதோ பேச தவிக்கின்றதோ

சந்திக்க துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
உன்னை எண்ணி உள்ளம் வாடும்
கண்கள் ரெண்டும் சண்டை போடும்

கண்ணே மனம் இல்லையா
காவல் விடவில்லையா
சந்திக்க துடித்தேன் பொன்மானே
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம் ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…ஹ்ம்ம்…

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY