Putham Pudhu Olai
Vedham Pudhithu
Hero Sathyaraj & Raja
Music Director Devendran
Lyricist Vairamuthu
Singers K.S.Chitra
Year 1987
Song Lyrics

புத்தம் புது ஓலை வரும் இந்த
பூவுக்கொரு மாலை வரும்
நந்தவனங்கள் பூமாலைக் கட்டும்
நாதஸ்வரங்கள் பொன் மேளங்கொட்டும்
நட்சத்திரம் அட்சதைகள் போடும்
பண்பாடும் என் நேரம் கூடும்...(புத்தம்)

என்னென்ன தடை வந்த போதும்
காதல் இறப்பதில்லை
மேகங்கள் பொழிகின்ற வெள்ளம்
வானத்தை நனைப்பதில்லை

காலம் இன்னும் கூடவில்லை
மாலை இன்னும் வாடவில்லை
நம்பிக்கை இழக்கவில்லை இப்போது..
புத்தம் புது ஓலை வரும்

கண்ணுக்குள் ஜீவனைத் தேக்கி
காலம் கழித்திருப்பேன்
உலகம் அழிக்கின்ற போதும்
உன்னை நினைத்திருப்பேன்

தேவனே காத்திருப்பேன்
தீயிலே பூத்திருப்பேன்
ஜென்மங்கள் தொடர்ந்திருப்பேன் இப்போது
புத்தம் புது ஓலை வரும்

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY