Maattu Vandi Salaiyile
Vedham Pudhithu
Hero Sathyaraj & Raja
Music Director Devendran
Lyricist Vairamuthu
Singers Malasiya Vasudevan
Year 1987
Song Lyrics

மாட்டு வண்டி சாலையிலே
பூட்டு வண்டி போகுதம்மா
பூட்டு வண்டி உள்ளுக்குள்ளே
கூண்டுக் கிளி வாடுதம்மா

கூறப்பட்ட இடம் வேறு
இவள் போகும் இடம் வேறு
காதலுக்கு வரலாறு கண்ணீரு தகராறு
மாட்டு வண்டி சாலையிலே

ஓடி போய் சொல்லி விட
உயிர் கிடந்து துடிக்கிறது
ஊமை கண்ட கனவு இது
உள்ளுக்குள் வலிக்கிறது

எண்ணத்தை சொல்லாமல்
ரெண்டு மனம் தவிக்குது
கன்னத்தில் சிந்தாமல்
கண்ணீரும் உறைந்தது

காட்டு மரங்கள் எல்லாம்
கை நீட்டி அழைக்குது
மாட்டு சலங்கை எல்லாம்
மகளோடு அழுகுது
மாட்டு வண்டி சாலையிலே

ஆற்று மணல் மேடுகளே
அதன் அருகே ஆலயமே
தென்ன இளம் தோப்புகளே
தேன் கொடுத்த சோலைகளே

நதி வழி போன மகள்
விதி வழி போகின்றாள்
இதயத்தில் துடிப்பில்லை
இருந்தாலும் வாழுகின்றாள்

சின்ன கிளி இரண்டும்
செய்த விட்ட பாவம் என்ன
அன்பை கொன்று விட்டு
ஆசாரம் வாழ்வதென்ன

மாட்டு வண்டி சாலையிலே
பூட்டு வண்டி போகுதம்மா
பூட்டு வண்டி போகுதம்மா

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY