Maadapurakkalum Manjal Nilakkalum
Pudhiya Sangamam
Hero Prabhu & Chandrasekar
Music Director Ramakrishna Raja
Lyricist Vairamuthu
Singers SP. Balasubramaniam
Year 1984
Song Lyrics

மாடப்புறாக்களும் மஞ்சள் நிலாக்களும்
கூட இருக்கையிலே சுகம்தான் சுவைதான்
முத்துச் சரங்களும் முல்லை மலர்களும்
மெல்ல சிரிக்கையிலே இதம்தான் பதம்தான்
இது பாடல் இது ராகம் இது தாளம் இது பாவம்

கல்லூரி கிள்ளைகளே..ஹோய்...ஹோய்....
கள்ளூறும் தென்னைகளே......
மாடப்புறாக்களும் மஞ்சள் நிலாக்களும்
கூட இருக்கையிலே சுகம்தான் சுவைதான்

வாழ்க்கை எந்நாளும் கும்மாளந்தான்
வயது வந்தாலே கொண்டாட்டம்தான்
உடலெங்கும் அலை மோதும் புது நீரோட்டம்தான்

விழி எழுதிட மனம் படித்திடும் பல கவிதைகளே
துணை அழைத்திட குரல் கொடுத்திடும் இளம் பறவைகளே
கடல் கூடும் நதி போல எனைச் சேருங்களேன்....
கல்லூரி கிள்ளைகளே..ஹோய்...ஹோய்....
கள்ளூறும் தென்னைகளே........(மாடப்புறா)

சாரி நோ என்று பெண் சொல்வது
ஒ.கே. எஸ். என்று பொருளாவது
பல வார்த்தை பொருள் மாறும் பெண் அகராதியில்

முகம் சிவப்பதும் நகம் கடிப்பதும் இளம் பருவமடி
தொட நினைக்கையில் இடம் கொடுத்திட மனம் உருகுமடி
ஒரு ஏக்கம் உனை தாக்கும் அது புரியாததோ
கல்லூரி கிள்ளைகளே..ஹோய்...ஹோய்....
கள்ளூறும் தென்னைகளே..........(மாடப்புறா)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY