Em Peru Kathamuthu
Pudhiya Sangamam
Hero Prabhu & Chandrasekar
Music Director Ramakrishna Raja
Lyricist Vairamuthu
Singers Malasiya Vasudevan
Year 1984
Song Lyrics

எம் பேரு காத்தமுத்து காணி நிலம் எந்தன் சொத்து
படிச்சிருக்கேன் நாலெழுத்து பாடிடுவேன் பாட்டெடுத்து
ஊருக்கெல்லாம் சேவை செய்து
வாழ்ந்திடுவேனே பேரெடுத்து........(எம் பேரு)

ஆத்த நம்பி மீனிருக்கு சேத்த நம்பி பயிரிருக்கு
ஊத்த நம்பி கெணறிருக்கு ஏலேலங்கிளியே
சோத்த நம்பி வயிறிருக்கு காத்த நம்பி மூச்சிருக்கு
கைய நம்பி நானிருக்கேன் ஏலேலங்கிளியே..(எம் பேரு)

நாடி முத்து ஆசாரி நகை மட்டும் செய்வாரு
காளிமுத்து என்பவரு சவால் மட்டும் விடுவாரு
சிலம்பு சண்ட தெரிஞ்ச முத்து செகப்பி மகன் சிங்கமுத்து
எல்லாமே தெரிஞ்ச முத்து இந்த முத்து செல்லமுத்து (எம் பேரு)

பொறக்க வச்ச ஆண்டவனே இறக்கும் தேதி எழுதி வச்சு
மறக்க வச்சான் மனிதர்களை ஏலேலங்கிளியே ஏலேலங்கிளியே
இறந்த பின்னும் நம்ம பேரு இருக்கும்படி செய்தால்தான்
பொறந்ததற்கு அர்த்தம் உண்டு ஏலேலங்கிளியே ஏலேலங்கிளியே..(எம் பேரு)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY