Manathu Vaanil Valam
Priyamudan Prabhu
Hero Prabhu
Music Director Gangai Amaran
Lyricist Gangai Kondan
Singers Malasiya Vasudevan
Year 1984
Song Lyrics

மனது வானில் வலம் வரும் நேரம்
இதயவீணை ஸ்வரங்களை பாடும்
தினம் தினம் கனவுகள்
உயிர் தரும் நினைவுகள் பபபப்பா (மனது)

தேடும் வாழ்வின் தேடல் இன்னிசையோ
ஊனும் உயிரும் கூடும் என்னிசையோ
எந்த ராகம் வந்தது இந்த பாடல் தந்தது
அன்பின் ரேகை படருமே மலரில் தேனும் சிதறுமே
என் பாடல் தேடல் யாவும் நீயே
உயிரினில் ஒளி மழையே.....( மனது வானில் )

மோகம் மோதும் கீதம் எதிரொலியோ
ராகம் தேடும் நாதம் பதில் அலையோ
எந்த வேகம் வந்தது இந்த தோகை விரிந்தது
இளைய வாலைப் பருவமே எனது காதல் உருவமே
என் பாடல் தேடல் யாவும் நீயே...
அழகிய பைங்கிளியே...( மனது வானில் )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY