Hoi Hoi Hoi Hoi Paarunga
Oorukku Oru Raja
Hero Sreeraj
Music Director S.D.Sekar
Lyricist Pulamai Pithan
Singers Vani Jayaram
Year 1979
Song Lyrics

ஹோய் ஹோய் ஹோய் பாருங்க
ஹோய் ஹோய் ஹோய் கேளுங்க
நாடு விட்டு நாடு போகும் நாடோடி இந்த கூட்டங்க
ஆடுகின்றோம் பாருங்க பாடுகின்றோம் கேளுங்க...

நாடோடி புகழ் போற்றிடும் பூமியில்
ஓரிடமாவது நில்லாது
போராடி தினம் வாழ்கின்ற வாழ்க்கையில்
எங்களிடம் சில பண்பாடு

ஏழை வாழ்வுதானே அன்பாலே அது தேனே
கனிவான உள்ளம் பாரிங்கே வேறெங்கே
பண்போடுதாங்க எந்நாளும் நாங்க ஆடுவோம் ஆட்டம்
ஆடுகின்றோம் பாருங்க பாடுகின்றோம் கேளுங்க...

ஊர் தோறும் மலைக் காட்டிலும் ரோட்டிலும்
மேட்டிலும் எங்கள் கூடாரம்
அங்கேதான் விதி காட்டிடும் பாதையில்
நடத்திடுவோம் புது வாழ்வேதான்

நிலையான வாழ்க்கை நேராது போனாலும்
கலை வாழும் நெஞ்சம் பிறர்காக என்றென்றும்
அன்போடு ஏங்கும் பண்பான உள்ளம் காணலாம் இங்கே
ஆடுகின்றோம் பாருங்க பாடுகின்றோம் கேளுங்க... (ஹோய்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY