Nalla Kavignan Enna
Nenjathai Allitha
Hero Mohan & Naresh
Music Director Ilayaraja
Lyricist P.B.Srinivas
Singers Malasiya Vasudevan,Vijayaramani
Year 1984
Song Lyrics

நல்ல கவிஞன் என்ன கலைஞன் என்ன
அறிவிருந்தால் போதுமா
கவர்ந்திழுக்கும் அழகில்லாமல்
கவிதை பாட தோன்றுமா

கம்பனாகட்டும் பெரிய கொம்பனாகட்டும்
அழகை பாட மறந்ததில்லை
மறந்து போனால் கவிஞன் இல்லை

ஹரே தேக்கோ பையா துனியா மேலே
அழகை கண்டா திவானா
ஆகாதிருக்கும் ஆத்மியெல்லாம்
அச்சா கவிஞன் ஆவானா.......(ஹரே....)

வைரன் என்றொரு பெரும் கவிஞன்
இரு பார்வையில்லா அருங்கவிஞன்
ஞானக் கண்ணால் அழகை பாடினான்
கேட்பவர் நெஞ்சம் உருக பாடினான்

அறிவோடு இருந்தாலே போதும் வண்ண
அழகெல்லாம் மனக் கண்ணில் ஓடும்
அழகோடு இருந்தென்ன லாபம் நல்ல
அறிவொன்றே அதைக் காட்டும் தீபம் (அறிவோடு)

தேன் குரலில் பாடுகின்ற திறமையுண்டு குயிலுக்கு
ஆனாலும் அதை தழுவ ஆசையுண்டோ மனதுக்கு
தேசீய பறவையென்ற பெருமையுண்டு மயிலுக்கு
தேசமே மயங்குதப்பா தோகை கொண்ட அழகுக்கு

வெள்ளாடு தாடி வைத்தால் வள்ளுவனாய் மாறிடுமோ
கரப்பான் மீசை வைத்தால் கட்டபொம்மன் ஆகிடுமோ
காண்பதற்கு அழகாகும் காங்கேயம் காளைதான்
காளையை அடக்குவது வண்டிக்காரன் மூளைதான்

மூணு ரூபாய் கொடுத்தாலே முனியாண்டி ஹோட்டலிலே
மூளை கிடைக்காதோ பீங்கான் ப்ளேட்டினிலே
அழகுக்கு விலையேது அதை விற்கும் கடையேது
அதுக்குள்ளே மதிப்பெல்லாம் அறிவுக்கு கிடையாது

கூனல் முதுகிருக்கும் குழி விழுந்த கண்ணிருக்கும்
காக்கா நிறம் போலே கறுத்த பெண்ணிருக்கும்
அறிவில் உயர்ந்திருப்பார் ஔவையார் போலிருப்பார்
அடடா உனைத் தவிர அவளை யார் மணப்பார்

கிளியைப் போலே பெண்ணிருந்தால் கல்யாணம் கட்டுவாயோ
முத்தமிட போனாலே.மூக்காலே கொத்துவாளே
புத்திசாலி பெண்ணிருந்தால் பூமாலை போடுவாயோ
புருஷனை ஒதுக்கி வச்சு புத்தகத்தை அணைப்பாளே

தன்னுடைய மனைவியிடம் இளமை குறைந்ததென்று
உன்னுடைய தந்தைதான் ஒதுக்கி வைத்ததுண்டோ
அழகு அழிந்து விடும் அறிவுக்கு அழிவேது
அறிவுள்ள பெண்ணால்தான் குடும்பம் நடக்கிறது

அட போடா சோமாறி புத்திக்கெட்ட பேமானி
கைய்தே கஸ்மாலம் ஊசி போன பிரியாணி அட
ஆத்தா அப்பன் பேர கேட்டா நீ இஸ்த்துகிற தோத்தா
விஸ்வநாதா வெளியில் வாடா வச்சுக்கிறேன்......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY