Aathora Aathalukku Aadiyile
Aathora Aatha
Hero Raghuvaran & Chakaravarthi
Music Director S.Neminathan
Lyricist Sakthi Shanmugam
Singers Sakthi Shanmugam
Year 1984
Song Lyrics

ஆத்தோர ஆத்தாளுக்கு
ஆடியிலே பொங்கலிட்டோம்
ஆடிக் காத்து வீசையிலே
ஆலோலம் பாடி வந்தோம்.....(ஆத்தோர

நல்ல மழை பொழியணும்
பூமி நல்லா வெளையனும்
ஊரும் செழிக்கணும்
கதிரு நல்லா வெளையனும்

கொண்ட சேவல் கூவையிலே
கலப்பையை எடுக்கணும்
அறுவடை செய்யணும்
ஆனந்தமா வாழணும்......(ஆத்தோர)

தந்தானனநானா தனதந்தானனேனானா
தந்தானனநானா தனதந்தானனேனானா
நாத்தெடுத்து நட்டுப்புடு
களையெடுத்து கதிர அறு......

காட்டுக் கோழி கண்ணடிச்சி
ஜாடையிலே பாக்குது
கன்னிப் பொண்ணு அத நெனச்சு
கரையோரம் போகுது

ஆத்துல கெண்டமீனு
அங்குமிங்கும் ஓடுது
ஆத்தோர ஆத்தாள அது ரசிச்சு பாக்குது
ஆத்தோர ஆத்தாள அது ரசிச்சு பாக்குது..(ஆத்தோர)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY